இந்தியாவைக் கண்டித்து தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவால் எப்படி எல்லாம் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகின்றது என்பதை தமிழ்நாடு ஒரு கண்டனத் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத மாநிலத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காமலும் தனக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமலும் தமிழக மக்களைக் கொலை செய்வது, தரவேண்டிய பணம் 23000 கோடிகளைத் தராததால் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவோ, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ, மாணவர்களுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்கவோ முடியாமல் தமிழ் நாடு எப்படி சிரமப்படுகின்றது என்பதை இத்தீர்மானம் ஊடாக உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இத்தீர்மானத்தை தினகரன், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் யாராவது கொண்டு வர வேண்டும்.  செய்வார்களா? இவர்களில் யாராவது உண்மையானவர்களாக இருந்தால் அதிமுக எதிர்க்கவா முடியும்?